×

தாவரவியல் பூங்காவில் முகக்கவசம் இல்லாமல் போட்டோ எடுக்கும் சுற்றுலா பயணிகளிடம் கட்டாய வசூல்: ஊழியர்கள் அடாவடி

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முகக்கவசம் இல்லாமல் போட்டோ எடுக்கும் சுற்றுலா பயணிகளிடம் ஊழியர்கள் அடாவடியாக கட்டாய வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுக்கு பின் தற்போது ஊட்டிக்கு இ-பாஸ் பெற்று பெற்று குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அவர்கள் மாடங்களில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை உட்பட அனைத்து மலர் அலங்காரங்களையும் கண்டு ரசித்துச் ெசல்கின்றனர். அதேசமயம் பூங்காவிற்குள் வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

எனினும், பல மாதங்களுக்கு பின் பூங்காவிற்குள் வரும் சுற்றுலா பயணிகள் இதனை அறியாமல், அங்காங்ேக நின்று புகைப்படம் எடுக்கின்றனர். அப்ேபாது முகக்கவசத்ைத கழற்றிவிட்டு எடுக்கின்றனர். மேலும், அருகருகே உள்ள மலர் அலங்காரங்கள் அருகில் ெசன்று புகைப்படம் எடுக்கின்றனர். இதனை பார்த்து முகக்கவசம் அணியாமல் பூங்காவிற்குள் சுற்றுகிறீர்கள் என ஊழியர்கள் உடனடியாக ரூ.200 அபராதம் விதிக்கின்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத சுற்றுலா பயணிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். நேற்றும் சில சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணியவில்லை என ஊழியர்கள் அவர்களை மிரட்டி வலுக்கட்டாயமாக ரசீதை கிழித்து கொடுத்தனர்.

அவர்கள், வெகு நேரம் போராடியும் அவர்களை ஊழியர்கள் விட்டபாடில்லை. பின், போலீசாரை அழைத்து, அபராத்தை ஊழியர்கள் பெற்றுக் கொண்டுவிட்டனர். கொரோனா தொற்று பரவாமல் இருக்க முககவசம் அணிவது கட்டாயம். அதேசமயம், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்கும்போது, சிறிது நேரம் முகக்கவசங்களை கழற்றிவிட்டு புகைப்படம் எடுப்பதற்குள் அபராதம் விதிப்பது சுற்றுலா பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே, தோட்டக்கலைத்துறையினர் இப்பிரச்னையில் ஊழியர்களுக்கு முறையான அறிவுரை வழங்குவது அவசியம்.

Tags : Adavati ,Botanical Gardens , Mandatory collection of tourists taking photos without a mask at the Botanical Gardens: Staff Adavati
× RELATED இத்தாலியன் பூங்காவில் பூத்த மலர்கள்