திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன் பாளையத்தில் விசைத்தரி ஆலை உரிமையாளர் கடத்தல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன் பாளையத்தில் விசைத்தரி ஆலை உரிமையாளர் கனகராஜ் (33) கடத்தப்பட்டுள்ளார். கடந்த 7ஆம் தேதி கடன் பெறுதல் தொடர்பாக கோவைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பணத்துடன் சென்ற கனகராஜ் 3 நாட்களாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். கனகராஜுக்கு கடன் கொடுத்தவர்கள் சில நாட்களாக தொடர்பு கொண்டு பணம் கேட்பதாக உறவினர்கள் தகவல் அளித்துள்ளனர்.

Related Stories:

>