×

ஆக்கிரமிப்பை கண்டுபிடிக்க நில அளவீட்டு பணிக்கு ட்ரோன் பயன்படுத்தலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  அரசு நிலம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்டுபிடிக்க, நில அளவீட்டு பணிக்கு ட்ரோனை பயன்படுத்தலாம் என ஐகோர்ட் கிளை  உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்கு பொன்மேனி விஏஓ தொந்தரவு செய்வதை எதிர்த்து  ஐகோர்ட்  மதுரை கிளையில் மனு  செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:  நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாட்களில் அளவீடு செய்ய வேண்டும். தவறினால் கட்டணத்தை திரும்ப  வழங்க வேண்டும். இந்த தாமதத்துக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் ரூ.2,500 பிடித்தம் செய்ய வேண்டும். மேலும் அப்பணியை  மேற்கொள்ள வேண்டிய அளவையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நில அளவீடு தொடர்பாக தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். அதை  உயரதிகாரி அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.  நில அளவீட்டு பணிக்காக ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் அரசு நிலம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்டுபிடிக்கலாம்.
இந்த வழிகாட்டுதல்கள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை ஒரு மாதத்தில் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் நிலத்தை நியாயமான நில  அளவையர் ஒருவரை நியமித்து அளவீடு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

ஊழல் அதிகாரிகளால் களங்கம்
நீதிபதி உத்தரவில், சில நில அளவையர்கள் வருவாய்த்துறையை அரசுக்கு வருவாய் குவிக்கும் துறையாக கருதாமல், தங்களுக்கு வருவாய் சேர்க்கும்  துறையாக கருதி செயல்படுகின்றனர். ஒரு காலத்தில் தமிழகம் நிர்வாகத்தில் சிறந்த மாநிலமாக இருந்தது. ஊழல் அதிகாரிகளால் அந்த பெயருக்கு தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளது என  தெரிவித்துள்ளார்.



Tags : land , Find the aggression For land surveying work Drone can be used: Icord branch order
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...