×

கீழடி அகழாய்வு தளத்தை ஐகோர்ட் நீதிபதி ஆய்வு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை ஐகோர்ட் மதுரை கிளை  நீதிபதி கிருபாகரன் நேற்று பார்வையிட்டார். அவரிடம்  தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் விளக்கமளித்தார். கீழடியில் 20வதாக தோண்டப்பட்ட குழியில் கடந்த செப்.14ம் தேதி இரண்டு அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது. இதையடுத்து 38  அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது. இதுதான் ‘தமிழகத்தின் முதல் பெரிய உறைகிணறு’ என தொல்லியல் ஆர்வலர்கள்  தெரிவிக்கின்றனர்.

அந்த உறை கிணற்றை நீதிபதி கிருபாகரன் ஆர்வமுடன் பார்வையிட்டார். மத்திய தொல்லியல் துறை முதுகலை பட்டய படிப்பில் தமிழ்மொழி   மீண்டும் சேர்க்கப்பட்ட நிலையில் நீதிபதி கிருபாகரன் ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவருடன் கலெக்டர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.



Tags : judge ,iCourt , Excavation site below ICourt Judge Review
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...