×

நவீன ரேடார் வசதியுடன் தனுஷ்கோடியில் 160 அடி கலங்கரை விளக்கம்

ராமேஸ்வரம்:  ராமேஸ்வரம், தனுஷ்கோடி பழைய ரயில் நிலையத்திற்கு அருகே, ரூ.7 கோடி செலவில் கலங்கரை விளக்கம் கட்டுவதற்கு, கடந்த  பிப்.18ம் தேதி  அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது. கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட இப்பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. சுமார்  160 அடி உயரத்தில் அமைய உள்ள கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதியில், கடலை கண்காணிக்கும் வகையிலும், ஆபத்து காலங்களில்  மீனவர்களை பாதுகாத்திடும் வகையிலும் நவீன ரேடார் கருவியும், கேமராக்களும் பொருத்தப்படுகிறது. சோலார் மின்சாரத்தில் இயங்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

 எண்கோண வடிவில் அமையவுள்ள கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் சென்று, ராமேஸ்வரம்  கோயில் உட்பட கடல் சூழ்ந்த பசுமையான தீவின் அழகை பார்க்கும் வகையில் பார்வையாளர் மாடமும், மேல் மாடத்திற்கு செல்ல லிப்ட் வசதியும்  அமைக்கப்படுகிறது. விரைவில் பணிகள் முடிந்து அடுத்த ஆண்டில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : lighthouse ,Dhanushkodi , With modern radar facility 160 feet in Dhanushkodi Lighthouse
× RELATED கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க...