×

முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்பவர்கள் தான் அதிமுக கூட்டணியில் இருக்கலாம்: துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உறுதி

கிருஷ்ணகிரி: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்கள்தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும் என  கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி கூறினார்.கிருஷ்ணகிரியில் நேற்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி எம்பி அளித்த பேட்டி: அதிமுக இரட்டை தலைமையில் எந்த  பிரச்னையும் இல்லை. தற்போது அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதற்கு என்னென்ன  அதிகாரங்கள் வழங்கப்படும் என்பதை தலைவர்கள் முடிவு செய்வார்கள். அந்த  குழு தன்னிசையாக செயல்பட முடியாது. அந்த குழு ஆலோசனை  வழங்கும் குழுவாக இருக்கும். முழு அதிகாரமும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களிடம்  உள்ளது.

தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, மாநில கட்சியாக இருந்தாலும் சரி எங்களுடன் கூட்டணிக்கு வரும்போது நாங்கள் அறிவித்த முதலமைச்சர்  வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்பவர்கள்தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும். பாஜ, எங்கள் கூட்டணியில் உள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் முருகனும் அதை கூறுகிறார். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. இடையில்  உள்ள சிலர் தேவையற்ற கருத்துக்களை கூறி, அதனால் ஆதாயம் கிடைக்காதா என நினைக்கிறார்கள். சசிகலா பல்வேறு விமர்சனங்களுக்கு  உள்ளானவர். எனவே அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : candidate ,Edappadi ,Deputy Coordinator ,KP Munuswamy ,AIADMK , Deputy Coordinator KP Munuswamy confirmed
× RELATED வேட்பாளர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு