×

கடந்த ஆண்டு பஸ் பாஸ் மூலம் ஐடிஐ மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்: எம்டிசி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மாநகர் போக்குவரத்துக்கழகம் சார்பில், அனைத்து கிளை மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா தொற்று காரணமாக தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது  அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி 5.10.20 முதல் மீண்டும் துவங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலைய இரண்டாம் ஆண்டு முதுநிலை பயிற்சி மாணவர்கள் தொழிற்பயிற்சி பெற, அவர்கள் தம் இருப்பிடத்திலிருந்து பயிற்சி  பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு சென்றுவர, சென்றாண்டு வழங்கப்பட்ட இலவச பேருந்து பயண அட்டை (2019-20) மற்றும் தாம் பயின்று வரும் கல்லூரிகளால் வழங்கப்பட்ட அடையாள  அட்டையைக்கொண்டு டிசம்பர் 2020 வரை இலவசமாக மாநகர் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணிக்க அனுமதியளிக்கும்படி அனைத்து  நடத்துனர்களுக்கும் இச்சுற்றறிக்கை வழி உத்தரவிடப்படுகிறது.

எனவே, உதவி மேலாளர்கள் இதுகுறித்து தங்களது கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும்  போக்குவரத்து மேற்பார்வையாளர்களுக்கு தக்கவாறு அறிவுறுத்திடவும், அனைத்து கிளை மேலாளர்கள் தங்களது பணிமனை நடத்துனர்கள் மற்றும்  ஓட்டுனர்களுக்கு உரிய வகையில் அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : ITI ,administration announcement ,MTC , By last year's bus pass ITI students Travel for free: MTC management notice
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...