×

ஐபிஎல் 2020: டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அபிதாபி : இன்றைய ஐ.பி.எல். டி - 20 கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபிதாபியில் மோதின. இதில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக  டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டீங் தேர்வு செய்தார்.

இதயைடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 164 ரன்களை எடுத்தது. கொல்கத்தா சார்பில் ராகுல் திரிபாதி, ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். திரிபாதி 4 ரன்னில் முகமது ஷமி பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த நிதிஷ் ராணா 2 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்களை இழந்தது கொல்கத்தா. 3-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். மோர்கன் 23 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.

அப்போது கொல்கத்தா 10.4 ஓவரில் 63 ரன்களே எடுத்திருந்தது. தினேஷ் கார்த்திக் தொடக்கத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரன் விகிதம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. மறுமுனையில் ஆமை வேகத்தில் நகர்ந்த ஷுப்மான் கில் 42 பந்தில் அரைசதம் அடித்தார். கொல்கத்தா 15 ஓவரல் 101 ரன்கள் எடுத்திருந்தது. 16-வது ஓவரில் 14 ரன்களும், 17-வது ஓவரில் 18 ரன்களும், அடித்தனர். 18-வது ஓவரில் அடுத்தடுத்து பவண்டரி அடித்து 22 பந்தில் அரைசதம் அடித்தார்  கேப்டன் தினேஷ் கார்த்திக்.

19-வது ஓவர் மற்றும் 20-வது ஓவரில் தலா 9 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்தது. . தினேஷ் கார்த்திக் 29 பந்தில் 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

165 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6விக்கெட்களை இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியின் கேட்பன் ராகுல் 58 பந்தகளில் 74 ரன்களையும், அகர்வால் 56 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணி சார்பில் ப்ரஸீத் கிருஷ்ணா 4 ஓவர்கள் பந்துவீசி 29 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி 3வது  இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி 7 வது இடத்தில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : IPL ,Kolkata ,match ,T20I ,Punjab , Kolkata, Punjab, win, IPL 2020, T20, Punjab
× RELATED ஐபிஎல் டி20; ராஜஸ்தான்-கொல்கத்தா இன்று மோதல்