×

6 மாதத்துக்கு பின் சமயபுரத்தில் ஆட்டுச்சந்தை: விற்பனை மந்தம்

மண்ணச்சநல்லூர்:  ஆறு மாதத்துக்கு பின் சமயபுரத்தில் இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. விற்பனை மந்தமாக இருந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டுசந்தை புகழ் பெற்றது. கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுகை, தஞ்சை, சேலம் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பார்கள். வாரந்தோறும் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை ஆடுகள் விற்கும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதமாக சந்தை நடைபெறவில்லை. தளர்வு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. அதிகாலை 3 மணிக்கு சந்தை துவங்கியது. வெளி மாவட்டங்களில் இருந்து லாரி, மினி வேன், லோடு ஆட்டோக்களில் சுமார் 2,000 ஆடுகள் கொண்டு வரப்பட்டன.

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில், விவசாயிகள் கூட்டமாக சேராமல் தாங்கள் கொண்டு வந்திருந்த ஆடுகளுடன் தனித்தனியாக நின்றனர். மேலும் முக கவசமும் அணிந்திருந்தனர்.  சந்தை வழக்கமாக காலை 10 மணி வரை நடைபெறும். காலை 8 மணிக்கெல்லாம் 1200 முதல் 1500 ஆடுகள் வரை விற்று விடும். ஆனால் இன்று ஆடுகள் விற்பனை மிக மந்தமாக இருந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி 500 ஆடுகளே விற்றிருந்தது. ஆடுகள் ரூ.14,000 முதல் ரூ.22,000 வரை விலை போனது. இறைச்சிக்கடைக்காரர்கள், ஆடுகளை வாங்கி விற்கும்


Tags : Samayapuram , For 6 months, in Samayapuram, sheep market, sale
× RELATED தீபாவளியையொட்டி ஆண்டிபட்டி...