×

சுகாதார அலுவலர் நியமன வழக்கில் முரண்பாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை:  சுகாதார அலுவலர் நியமனம் தொடர்பான வழக்கில் முரண்பாடாக நடந்து கொண்ட பொது சுகாதாரத்துறை இயக்குநர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவர் தினேஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:-காலியாகவுள்ள 33 சுகாதார அலுவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2014ல் அறிவிக்கப்பட்டது. நான் விண்ணப்பித்தேன். 2015ல் வெளியான தேர்வு முடிவில் என் பெயர் இல்லை. ஆனால், காத்திருப்போர் பட்டியலில் எம்பிசி(சீர்மரபினர்) பிரிவில் என் பெயர் முதலிடத்தில் இருந்தது.

எம்பிசி(சீர்மரபினர்) பிரிவில் தேர்வான ஒருவர் தனது ெசாந்த பணி காரணமாக சுகாதார அலுவலர் பணியில் இருந்து விலகினார். இந்த இடத்தில் என்னை நியமிக்கவில்லை. இதை எதிர்த்த வழக்கில், ராஜினாமாவை ஏற்கவில்லை என தெரிவித்தனர். இதனால், என் மனு டிஸ்மிஸ் ஆனது. பின்னர், ராஜினாமா ஏற்கப்பட்டும், எனக்கு பணி வழங்கவில்லை. இதை எதிர்த்த வழக்கில், எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. காலியிடம் ெதாடர்பாக டிஎன்பிஎஸ்சிக்கு தெரிவிக்கப்பட்டு, விதிகள் படி தேர்வு நடைமுறை மேற்ெகாள்ளப்படும் என பொது சுகாதாரம் மற்றும் ேநாய் தடுப்புத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். எனது கோரிக்கை ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. எனவே, அவரது உத்தரவை ரத்து செய்து என்னை, சுகாதார அலுவலராக பணியமர்த்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, ஒருவரது ராஜினாமா ஏற்கப்பட்டு காலியிடம் ஏற்பட்ட போதே, அந்த இடத்தில் மனுதாரரை நியமனம் செய்திருக்க வேண்டும்,’’என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கு விசாரணையில் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விதமான தகவலை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு நிலை எடுத்துள்ளனர். இந்த நடைமுறையைத் தான் அனைத்து துறை இயக்குநர்கள் மற்றும் செயலர்கள் பின்பற்றுகின்றனர். இவர்களின் சோம்பேறித்தனம் எதுவும் சரியில்லை என்பதையே காட்டுகிறது. நீதிமன்றத்திற்கு தவறான பல தகவல்களை அளிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தான் அரசின் உயர் பதவிகளில் உள்ளனர். சுகாதாரத்துறை என்பது அர்ப்பணிப்புடன் கூடியது. மக்களை காக்கும் உன்னத பணி. நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் வகையில் முரண்பாடான தகவல்களை அளித்துள்ளனர்.

எனவே, நியமனம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சிக்கு கடிதம் எழுதியது தொடர்பான பொது சுகாதாரத்துறை இயக்குநரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை நியமிப்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் சுகாதாரத்துறை செயலருக்கு எழுதிய கடிதத்தின் மீது 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இரண்டு வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் இயக்குநரின் நடவடிக்கைகள் தொடர்பாக இணைச் செயலர் தகுதிக்கு குறையாத ஒரு அதிகாரியை நியமித்து அனைத்துவிதமான ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அதில் தவறு நடந்திருந்தால் அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முரண்பாடான தகவல்களால் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளனர். எனவே, தற்போதைய இயக்குநர் செல்வவிநாயகம், முந்தைய இயக்குநர் குழந்தைசாமி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை, ஐகோர்ட் கிளை பதிவாளரிடம் 2 வாரத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Tags : Public health directors ,health officer ,branch action ,ICC , Health Officer, in case of appointment, fined Rs.10,000 to the Directors of Health
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...