×

வரும் 16-ம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி: கேரள அரசு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி முதல் தினசரி ஆயிரம் பக்தர்களை மட்டும் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது. மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி விழா நடக்கும் நாளில் மட்டும் 5 ஆயிரம் பேரை அனுமதிப்பது என்றும் வார இறுதி நாட்களில் 2 ஆயிரம் பேர் வரை ஐயப்பனை தரிசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பக்தர்களை அனுமதிப்பதற்கான முன்னோட்டமாக வரும் 16 ஆம் தேதி முதல் தினசரி 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த பல மாதங்களாக, மாத பூஜை நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனில் கொரோனா கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கேரளா தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

அவர்கள் அளித்த அறிக்கையின்படி, தினசரி 1000 பக்தர்கள் மட்டும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே சாமியை தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 2 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் எனக்கூறியுள்ள கேரள அரசு, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை நடைபெறும் நாட்களில் 5 ஆயிரம் பேர் சாமியை தரிசிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Tags : Devotees ,Sabarimala Iyappan Temple ,Government of Kerala , Coming 16th, Sabarimala Iyappan Temple, for devotees, permission
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி