×

கோடீஸ்வரரானார் கண்ணூர் வாலிபர்!: ‘ட்ரீம் லெவனில்’ விளையாடி முதல்பரிசு..!!

திருவனந்தபுரம்: பல கோடிகள் புரளும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், களத்தில் நுழையாமலும், ஜெர்லி அணியாமலும் கேரள வாலிபர் கோடீஸ்வரரானது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பானூர் மீத்தேல் பரம்பில் பகுதியை சேர்ந்தவர் கே.எம்.ராஸிக். இவர் ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம் லெவன்’ விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று ரூ. 1 கோடி பரிசு வென்றுள்ளார். ஐபிஎல் தொடர்பாக ‘ட்ரீம் லெவன்’ தினசரி போட்டிகளில் ரூ.1 கோடி அதிகபட்ச பரிசுத்தொகையாகும். ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் 2 அணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வீரர்களின் மெய்நிகர் குழுவை தேர்ந்தெடுத்து ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டி விளையாடப்படுகிறது. இதில் நிஜ அணியின் வீரர்கள் அடித்த ரன்கள், விக்கெட்டுகள் மற்றும் பவுண்டரிகளின் அடிப்படையில், ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் போட்டியில் விளையாடுபவருக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை(7ம் தேதி) விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை ஒட்டி, ராஸிக் ‘ட்ரீம் லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டியில் வீரர்களை தேர்ந்தெடுத்து விளையாடினார். இதில் ராஸிக்கின் ‘ட்ரீம் லெவன்’ அணி 790.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் ‘ட்ரீம் லெவல்’ ஆன்-லைனில் போட்டியிட்ட 55 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை தாண்டி ராஸிக் இந்த சாதனையை பெற்று வெற்றிக்கனியை பறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணூர் ஏ.கே.ஜி மருத்துவமனையில் ஸ்டேஷனரி கடை நடத்தி வரும் ராஸிக், பானூர் கிரிக்கெட் பிளேயர்ஸ் கிளப்பில் உறுப்பினராக உள்ளார். ரூ.30 லட்சம் வரி கழித்த பிறகு, ராஸிக்கிற்கு ரூ.70 லட்சம் கிடைக்கும்.


Tags : Kannur ,millionaire ,Dream Eleven , Millionaire, Kannur Youth, ‘Dream Eleven, First Prize
× RELATED கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்...