×

கோ-ஆப்டெக்ஸ் தள்ளுபடி விற்பனை துவக்கம் விற்பனை இலக்கு ரூ.1 கோடியாக நிர்ணயம்

ஊட்டி: ஊட்டி கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா ேநற்று நடந்தது. இதில் கலெக்டர் பங்கேற்று விற்பனையை துவக்கி வைத்தார். தீபாவளி விற்பனைக்காக  மென் பட்டு, கோரா காட்டன், பருத்தி சேலைகள்,போர்வை,படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆயத்த ஆடைகள், சுடிதார் ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஊட்டி விற்பனை நிலையத்தில் ரூ.83.17 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளிக்கு ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கைத்தறி ஆடைகள் வாங்கி பயன்பெற வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அருள்ராஜன், துணை மண்டல மேலாளர் மோகன்குமார், மேலாளர் பாலமுருகன், விற்பனை நிலைய பொறுப்பாளர் சபினா நாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Co-optex, discount sale, launch, Rs 1 crore
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...