×

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி :அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன்

ந்தமல்லி,:வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். திருவேற்காட்டில் அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடங்களை நேற்று மாலை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், திருவேற்காட்டில் ஆதிதிராவிடர் உழைக்கும் மகளிர் நல விடுதியை விரைவில் முதல்வர் திறந்து வைப்பார். அதேபோல், மினி ஸ்டேடியம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி, குளத்தை மீட்கும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்வர் கடிதம் எழுதிய 2 மணி நேரத்தில் தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ்மொழி சேர்க்கப்பட்டு உள்ளது.

எல்லா இடங்களில் தமிழுக்கு முதல்வர் முதன்மை பெற்று தருவார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும்.அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்தான், இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என அமைச்சர் பாண்டியராஜன் உறுதியாகத் தெரிவித்தார்.Tags : AIADMK ,Mafa K. Pandiyarajan ,alliance ,assembly elections ,
× RELATED அதிமுக - பாஜக கூட்டணியால் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு எளிது