×

‘10-10-2020’ இன்று சிறப்பு வாய்ந்த நாள்.. மறுமுறை இதுபோல வராது.. இரட்டிக்கும் எண்கள்

திருவனந்தபுரம்:ஆண்டின் சில நாட்கள் வித்தியாசமாக அமைந்து நம் மனதில் பதிந்துவிடும். 01.01.’01, 01,02.’03, 12.12.’12 என நம்பார்வை பதிந்த வித்தியாசமான பலநாட்களை நாம் கடந்து வந்துள்ளோம். அந்த வரிசையில் இன்றைய நாளும்(10.10.2020) ஒரு வேறுபட்ட நாளாக அமைந்துள்ளது. இதுபோன்ற ஒரு நாளை இனிநாம் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தற்போது 2020ம் ஆண்டின் 41வது வாரத்தில் இருக்கிறோம். இந்த 2020ம் ஆண்டு 366 நாட்களை கொண்ட லீப் ஆண்டு (பிப்ரவரியில் 29 நாட்கள்). இந்த காலண்டர் ஆண்டில் இனி 83 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இன்றைய தேதி வார இறுதி நாளான சனிக்கிழமை வந்துள்ளது. மேலும் இது 2020ம் ஆண்டின் 284வது நாள். இன்று 1, 2 ஆகிய எண்கள் இருமுறை மீண்டும், மீண்டும் மிகவும் வலுவாகின்றன. இதுவும் ஒரு சிறப்பாகும். இதுபோல இன்றைய தினத்தை ரோமன் எண்களில் எழுதினாலும் இருபக்கங்களிலும் (‘X.X.MMXX’, இதில் X=10, M=1000, MMXX=2020) ஒரு சிறப்பாக அமைவதையும் காணலாம்.

‘நியூமராலஜிக்கல் சாட்’ (எண் கணித விளக்கப்படம்) படி 1, 2 ஆகிய எண்கள் மிக வலுவானவை. மேலும், இவை முறையே சூரியன் மற்றும் சந்திரனை குறிப்பதாக எண் கணித வல்லுநர்கள் கூறுவர். அந்த வகையில் இன்றைய நாள் (10.10.2020) நிச்சயமாக புதிய தொடக்கங்களுக்கு வழிவகுக்கும் எனவும் எண் கணித நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா உலகையே அச்சுறுத்தி வரும் 2020ம் ஆண்டில், இந்த சிறப்பான நாள் நமக்கு ஒருவித நிம்மதியை தருகிறதன்றோ? வரும் நாட்கள் அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும்.

Tags :
× RELATED நிவர் புயல் எதிரொலியாக மழை, வெள்ள...