×

ஓபிஎஸ் மகனைத் தொடர்ந்து நியூமராலஜிப்படி பெயரை மாற்றும் அதிமுக நிர்வாகிகள்

சிவகாசி:எண் கணித ஜோதிடம் என்றழைக்கப்படும் நியூமராலஜியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள், தங்களது பெயர்களை மாற்றி கொள்வது வழக்கம். இப்படி பெயர் மாற்றம் செய்து கொண்ட அரசியல்வாதிகள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்பட நிறையபேர் உண்டு. சமீபத்தில் தேனி எம்பி ரவீந்திரநாத்குமார் தனது பெயரை ப.ரவீந்திரநாத் என்று மாற்றி கொண்டுள்ளார்.
இந்த நியூமராலஜிபடி பெயர் மாற்றம் விருதுநகர் மாவட்ட அதிமுக அரசியலை ஆட்டி படைக்கிறது. ராஜேந்திரன் என்ற பெயரில் இருந்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகிவிட்டார். துரைப்பாண்டி என்ற பெயரில் இருந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் என பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

தற்போது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகள் திடீரென தங்களது பெயர்களை நியூமராலஜிப்படி மாற்றி சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் அதிமுக நகர செயலாளர் பாஸ்கரன் தனது பெயரை ராணா பாஸ்கர்ராஜ், ராஜபாளையம் நகர ஜெ.பேரவை செயலாளர் முருகேசன் தனது பெயரை துரை முருகேசன், மம்சாபுரம் நகர செயலாளர் அய்யனார் தனது பெயரை அய்யனார்ஜி, நரிக்குடி அதிமுக நிர்வாகியும் நடிகருமான கே.சி.பிரபாத் தனது பெயரை சி.பிரபாத்வர்மன் என மாற்றம் செய்துள்ளனர்.
இதுபோன்று மாவட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தங்களது பெயர்களை மாற்றி  சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : executives ,AIADMK ,OBS ,
× RELATED சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து...