×

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிரிழப்பு

தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிரிழந்தார். மலையில் சிக்கிய 10 பேரில் 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மலை ஏறிய தனியார் வங்கி தலைமை காசாளர் ஆனந்த்ராஜ் (42) உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஆனந்தராஜின் மகன் கார்த்தி (12) உள்பட மலையில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மழை என்பது 2668 அடி உயரம் கொண்டது. இந்த மலையின் மீது பல்வேறு குகைகள் உள்ளது. அடர்ந்த பகுதிகளாகவே இந்த பகுதிகள் காணப்படுகிறது. குறிப்பாக இந்த மலையின் மீது ஏறுவதற்காக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனையும் மீறி உரிய அனுமதி இல்லாமல் திருவண்ணாமலையை சேர்ந்த தனியார் ஸ்கேட்டிங் அகாடமி ஒன்று பத்திற்கும் மேற்பட்டோரை ட்ரக்கிங் அழைத்து சென்றுள்ளனர்.

குறிப்பாக திருவண்ணாமலையிலுள்ள தனியார் வங்கியினுடைய தலைமை காசாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தராஜ். அவருக்கு வயது 42. அவருடைய மகன் கார்த்திக் வயது 12. இவர்களில் 2 பேர் உள்ளிட்ட சுமார் 10 பேர் அந்த மலையின் மீது எறியதாக கூறப்படுகிறது. அதிகாலை ஏறியவர்கள் 2668 அடி உயரம் கொண்ட மலையின் மீது இன்று சென்றபோது தலைமை காசாளரான ஆனந்தராஜ் என்பவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும், கீழே விழுந்த அவரை மீட்பதற்காக தீயணைப்பு துறை, வனத்துறையினர் இன்று காலையிலே அங்கு ரோந்து பணியில் சென்று பாதுகாப்பாக மீட்பதற்காக சென்றுள்ளனர்.

குறிப்புக்காக அவர்களை மீட்கும் போது ஆனந்தராஜ் என்ற தலைமை காசாளரை இறந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் தற்போது மலை பாதுகாப்பு குழு இளைஞர்கள் ஒன்று கூடி 10 க்கும் மேற்பட்டோர் இறந்த அவரது உடலை பாதுகாப்பாக கீழே எடுத்து வருகின்றனர். மலை ஏறுவதற்கு தடை விதித்திருந்த போதும் மலை ஏறியிருக்கிறார்கள் இவர்கள். விதியை மீறியதால் இவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யலாம் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 9 பேர் பாதை தெரியாமல் அங்கும் இங்கும் தவித்து வருவதாகவும், அவர்களை தற்போது வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Thiruvannamalai One ,hill ,Annamalaiyar , Thiruvannamalai
× RELATED வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்