×

சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்படுவதற்கு முன்னரே உலகின் பல்வேறு இடங்களில் வைரஸ் பரவியதாக அந்நாட்டு அரசு அறிக்கை!!

பெய்ஜிங் : உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவியது என்ற தகவலை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2019ம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வுகாண் நகரத்தில் இருந்து வெடித்து கிளம்பிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என்று வெளிப்படையாகவே சாடி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்திருப்பது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி, கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்படுவதற்கு முன்னரே உலகின் பல்வேறு இடங்களில் வைரஸ் வெளிப்பட்டு இருப்பதாக கூறினார். சீனா மட்டும் நோய் கண்டறிந்து உலகிற்கே தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். வைரசுக்கு எதிராக செயல்பட்டதுடன், கிருமியின் மரபணு வரிசையை உலகத்துடன் பகிர்ந்துக் கொண்டதாகவும் சீன அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் சீனாவின் ஹூபே மாகாணம் வுகாண் நகரில் இருந்து தான் தொடங்கியது என்ற தகவலையும் அந்நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Tags : government ,world ,China , China, Corona, Virus, Government, Report
× RELATED கடமலைக்குண்டுவில் உலக பூமி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி