முடிவுக்கு வந்த கிளைமேக்ஸ்.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ்,அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமனி, எம்.சி.சம்பத், சரோஜா சுவாமி தரிசனம்!!

திருமலை,:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் 3 அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை நடைபெற்ற விஐபி தரிசனத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமனி, எம்.சி.சம்பத், சரோஜா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதையடுத்து கோயிலுக்கு எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதைதொடர்ந்து பெரிய ஜீயர் மடத்தில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். அதிமுக முதல்வர் வேட்பாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓ பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.  துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் பேட்டி எடுக்க நிருபர்கள் முயன்றனர். ஆனால் பேட்டியளிக்க மறுத்துவிட்டனர்.

Related Stories:

>