×

கோபியில் காதல் திருமணம் செய்ததால் கடத்தி சிறை வைக்கப்பட்ட பெண் மீட்பு

கோபி: கோபியில் காதல் திருமணம் செய்ததால் கடத்தி சிறை வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டார். நைனாம்பாளையத்தில் சவுந்திரநாயகி பெற்றோர் எதிர்ப்பை மீறி அசோக் என்பவரை காதல் திருமணம் செய்தார். சவுந்திரநாயகி குடும்பத்தினர் காதல் தம்பதியை தந்திரமாக விருந்துக்கு அழைத்தனர். நண்பர்கள் புடை சூழ காதல் மனைவியுடன் சென்ற அசோக்குக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சவுந்தரநாயகியை அறையில் பூட்டிவிட்டு அசோக் மற்றும் நண்பர்கள் மீது 10 பேர் கும்பல் தாக்கி விரட்டியது. காதல் பட பாணியில் நடந்த இந்த சம்பவம் குறித்து கோபி போலீசில் அசோக் புகாரளித்தார். ஒரு வார தேடலுக்கு பிறகு சவுந்தரநாயகியை கோபியில் போலீசார் மீட்டனர். கடத்தல் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அசோக் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் பெண்ணின் அண்ணனை தேடி வருகின்றனர்.

கோபி அருகே உள்ள நைனாம்பாளையத்தை சேர்ந்த சவுந்தரநாயகி என்ற இளம்பெண் கடந்த 16 ஆம் தேதி ஒளவ்வையார்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரத்தின் மகன் அசோக் என்பவரை காதல் திருமணம் செய்து கொள்கிறார். அகோக் மற்றும் சவுந்தரநாயகி இரண்டு பேரும் கோபியில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகின்றனர். இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 16ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணம் முடிந்த பின்பு சவுந்தரநாயகி தனது கணவருடன் வந்து கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் அளிக்கின்றனர். இந்த புகார் குறித்து விசாரிக்கும் போது பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் மணமகன் வீட்டார் திருமணத்தை ஏற்றுக்கொண்டு மணமகளை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு இரண்டு முறையாக பெண் வீட்டார் மகள் சவுந்தர்யாவையும், அசோக்கையும் வீட்டிற்கு அழைத்துள்ளனர்.

இரண்டு முறையும் அசோக் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று வந்ததால் வழக்கமான நடவடிக்கையாவே அமைந்துள்ளது. அதன்பிறகு கடந்த 2ஆம் தேதி மூன்றாவது முறையாக பெண்ணின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி சவுந்தரநாயகியின் அண்ணன் வாசுதேவன் சவுந்தரநாயகியை அழைத்துள்ளனர்.

உடனே சவுந்தரநாயகி தனது கணவர் அசோக் மற்றும் கணவரின் தம்பி பரணிதரன், நண்பர் சூர்யா  ஆகியோர் நைனாம்பாளையம் சென்றுள்ளனர். அங்கு சென்றதும் சவுந்தரநாயகியின் அண்ணன் வாசுதேவன் மற்றும் 10 பேர் சேர்ந்து சவுந்தரநாயகியை அடித்து  வீட்டில் அடைத்துள்ளனர். கூட சென்ற அசோக் மற்றும் பரணிதரன், நண்பர் சூர்யா ஆகியோர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்து தப்பி சென்ற அசோக் போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் பெண்ணின் வீட்டிற்கு போலீசார் விசாரணை நடத்த போது அனைவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் இன்று கடத்தப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். இந்த புகார் குறித்து அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது.

Tags : Kobe , Kopi, love marriage, female redemption
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்