வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டு சர்வேயர்கள் கட்டிபுரண்டு சண்டை

தாம்பரம்: தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக நில அளவையர் பிரிவில் வட்ட துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷ். தாம்பரம் டவுன்  சர்வே அலுவலகத்தில் சார்-ஆய்வாளராக பணியாற்றி வருபவர் முத்துக்குமார். இவர்களுடன் குறுவட்ட அளவையராக அனுராதா பணியாற்றி  வருகிறார். நேற்று நில அளவை பிரிவில் சந்தோஷ் மற்றும் முத்துக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக  தாக்கி கொண்டனர். அனுராதா அவர்களை தடுக்க முயன்றார். ஆனாலும், இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, சந்தோஷ், முத்துக்குமார் இருவரும் மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். நில  அளவை பிரிவில் உள்ள பெண் ஊழியருடன் நெருங்கி பழகுவது தொடர்பாக சந்தோஷ், முத்துக்குமார் ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>