×

மது போதை தகராறில் தொழிலாளி அடித்து கொலை: நண்பர்கள் கைது

திருவொற்றியூர்: மது போதை தகராறில் கூலி தொழிலாளியை அடித்து கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தவரம் பகுதியை சேர்ந்தவர்கள் நல்லதம்பி (35), சுதாகர் (28), வேளாங்கண்ணி (50). நண்பர்களான இவர்கள் சாலையில் கிடக்கும் பிளாஸ்டிக்  பொருட்களை சேகரித்து காயலான் கடை தொழில் செய்து வந்தனர். தினசரி வேலை முடிந்ததும் கிடைக்கும் வருமானத்தில் மூவரும் சேர்ந்து மது  அருந்துவது வழக்கம். அதன்படி, கடந்த 7ம் தேதி 3 பேரும் வேலை முடிந்ததும் மதுபானம் வாங்கி மஞ்சம்பாக்கத்தில் வைத்து குடித்தனர். அப்போது, போதை அதிகமானதால்  மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் சமாதானம் செய்தனர். இதையடுத்து சுதாகர், வேளாங்கண்ணி ஆகியோர் வீட்டுக்கு சென்றனர்.  நல்லதம்பிக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் வீட்டுக்கு நடந்து செல்ல முடியாமல், அதே இடத்தில் படுத்து தூங்கியுள்ளார். மறுநாள் காலை அந்த வழியாக வந்தவர்கள் சாலையோரத்தில் நல்லதம்பி  மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து, மாதவரம் பால்பண்ணை  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  போலீசார் விரைந்து வந்து நல்லதம்பியை  மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர்  உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, நல்லதம்பியை அடித்து கொலை செய்த வழக்கில் சுதாகர், வேளாங்கண்ணி ஆகிய இருவரை கைது  செய்து விசாரித்து வருகின்றனர்.Tags : death ,Friends , In an alcohol addiction dispute Worker beaten to death: Friends arrested
× RELATED தனியார் தொழிற்சாலையில் தலையில் இரும்பு விழுந்து தொழிலாளி நசுங்கி பலி