×

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கை அறிவிப்பு

சென்னை: மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில், இந்த ஆண்டுக்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி  தொடங்கி கடந்த 7ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் உள்ள 8608 தனியார் சுயநிதி பள்ளிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 771 இடங்களுக்கு இணையதளம் மூலமாக 86,318 விண்ணப்பங்கள்  பெறப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

மேலும், உத்தேசமாக  காலியாக உள்ள 55 ஆயிரம் இடங்களுகளுக்கு,  இரண்டாம் கட்ட சேர்க்கைக்கான நடைமுறைகள் இன்று முதல்  தொடங்கியுள்ளன. அதன்படி வரும் 12ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை  rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம்   விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்களும்  இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையில் நவம்பர் 11ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.   மேலும் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Announcement ,schools , 25 per cent reservation in private schools For poor students Second Phase Admission Notice
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...