×

காசா கிராண்ட்டின் ‘பர்ஸ்ட் சிட்டி’ குடியிருப்புகள்

சென்னை: காசா கிராண்ட் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் சோழிங்கநல்லூரில் 15 ஏக்கரில் பர்ஸ்ட் சிட்டி அடுக்குமாடி குடியிருப்புகளை ரோமன்  கட்டிடக்கலை பாணியில் 100க்கும் மேற்பட்ட உயர்தர வசதிகளுடன் ஒரு சதுர அடி 3799க்கு உருவாக்குகிறது.சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து 5 நிமிட தூரத்தில், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப மேம்பட்டு நிறுவனங்கள், பள்ளிகள்,  மருத்துவமனைகளுக்கு மத்தியில் இந்த குடியிருப்புகள் உள்ளது. 2, 3 மற்றும் 4 படுக்கை அறைகள் கொண்ட சொகுசு குடியிருப்புகள் 45 லட்சம்  முதல் துவங்குகிறது.இப்பகுதி சந்தை விலை (ஒரு சதுர அடி 6500) ஒப்பிடுகையில், இப்பகுதியிலையே மிகக் குறைந்த விலையாக ஒரு சதுர அடி 3799க்கு  காசாகிராண்ட் வழங்கவுள்ளது.

இதுகுறித்து காசா கிராண்ட் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ஈஸ்வர் கூறுகையில், பர்ஸ்ட் சிட்டி குடியிருப்பு எங்கள் பயணத்தின் ஒரு முக்கிய  மைல்கல். வீடு வாங்கும் அனுபவத்தையும் சொகுசு என்ற சொல்லையும் இந்த திட்டம் மற்றும் அதன் கட்டிடக்கலை மூலம் நாங்கள் மறுவரையறை  செய்ய உள்ளோம். 5 ஏக்கர் பசுமை புல்வெளியுடன், வாகன போக்குவரத்து இல்லாமல் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் திறந்தவெளியில்  மகிழ்ச்சியாக பொழுதுபோக்குவதற்கு ஏற்ற வகையில் இந்த குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இந்த திட்டமானது 13 பிளாக்குகளை உள்ளடக்கி 3 கட்டங்களாக கட்டப்படுகிறது. முதல் கட்டமாக 350 குடியிருப்புகள் கட்டப்படும். இவை அடுத்த 24  மாதத்தில் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும், என்றார்.



Tags : First City' Apartments ,Gaza Strip , Of Gaza Grant ‘First City’ Apartments
× RELATED காசாவில் பாராசூட் மூலம் உணவுப்...