×

டிவிட்டரில் ஆவி பறந்த இட்லி சண்டை: இங்கிலாந்துக்காரர் இழுத்து விட்ட வம்பு: கொதித்து எழுந்த தென்னிந்திய மக்கள்

* கொலை பசி... ரெண்டு இட்லிய சுடச்சுட போட்டா நல்லா இருக்கும்...
* ஆஹா, இட்லி பூ மாதிரி இருந்துச்சு... உள்ள போனதே தெரியல...

 இப்படி, இட்லியின் மகிமையை பாராட்டி பேசாத தென்னிந்தியர்களே இருக்க முடியாது. காலை, மாலை, இரவு என 24 மணி நேர இஷ்ட உணவாகி  விட்ட இட்லியை, வெளிநாட்டுக்காரர் ஒருவர் கேவலப்படுத்தி விட்டார் விட முடியுமா?ஒட்டு மொத்த தென்னிந்திய மக்களும் வரிந்து கட்டிக் கொண்டு கொதித்தெழுந்த சம்பவம், டிவிட்டரில் நடந்துள்ளது.  இந்த சமூக வலைதள பக்கம்   இப்போது  இட்லி பற்றிய காரசார கருத்துகளால், ஆவி பறந்து கொண்டிருக்கிறது.இந்த மோதலை உருவாக்கி விட்டவர் பிரிட்டனை சேர்ந்த எட்வர்ட் ஆண்டர்சன். இவர் ஒரு வரலாற்று பேராசிரியர்.  இந்தியா - பிரிட்டன் தொடர்பான  ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் இவர், ‘உலகிலேயே மிக சலிப்பான உணவு இட்லிதான்,’ என்று சமீபத்தில் டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். சிறிது  நேரத்திலேயே  இட்லி விரும்பிகளின் கோபம் விஸ்வரூபம் எடுத்து விட்டது. டிவிட்டரில் வார்த்தை போர் தொடங்கியது.* இட்லியை டெலிவரி செய்து செம கல்லாவை கட்டி வரும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான  ஜூமேட்டா,  ‘ஒரு உணவு  பண்டம், ஏன் இத்தனை மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை யே மிஸ்டர் ஆண்டர்சன்,’ என பதிலடி  கொடுத்துள்ளது.
அடுத்த சில மணி நேரங்களில்,  இட்லி பிரியர்கள் - இட்லி வெறுப்பாளர்கள் என 2 தரப்பினர்  டிவிட்டரில் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

‘இட்லியின் ஏன் இவ்வளவு வெறுப்பு என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பூ போன்ற இட்லியுடன் தேங்காய் சட்னியும்,  சூடான  பெங்களூர் சாம்பாரும் சேர்ந்தால்... ஆஹா... அப்படிப்பட்டி ஒரு   திருப்தியான வேறு உணவை என்னால் நினைக்க முடியவில்லை,’ என கூறியுள்ளார்   அஜய் காமத் என்ற இட்லி ஆதரவாளர்.
இவ்வளவு ஏன்? காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான  சசிதரூர் கூட, இட்லி எதிர்ப்பாளர்களை ஒரு பிடி பிடித்து விட்டார்.  ‘எஸ் மை  சன்... இந்த உலகத்தில் உண்மையிலேயே சவால் விடுகிறவர்கள் இருக்கிறார்கள். நாகரீகத்தைப் புரிந்து கொள்வது கடினம். இட்லியைப் பாராட்டுவது,  கிரிக்கெட்டை ரசிப்பது அல்லது ஓட்டம் துள்ளலைப் பார்ப்பதற்கான சுவையும், மனமும் எல்லா மனிதனுக்கும் வழங்கப்படவில்லை. இந்த ஏழை  மனிதன் மீது பரிதாபப்படுகிறேன். வாழ்க்கையைப் பற்றி அவருக்கு சரியாக தெரியவில்லை,’ என்று ஆண்டர்சனை கடித்து துப்பி விட்டார்.

 இதுபோல், பலப்பல பிரபலங்கள், பொதுமக்கள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் என பல ஆயிரம் பேர், ஆண்டர்சனை காட்டு காட்டு என்று காட்டி  விட்டனர். இதனால் அவர் சிறிது  அதிர்ந்த போனாலும், ‘சொன்னது சொன்னதுதான்...’ பிடிவாதமாக கூறி விட்டார்.அவர் வெளியிட்டுள்ள பதில் பதிவில், ‘தெரியாமல்,  தென்னிந்தியா முழுவதையும் கோபப்படுத்தி விட்டேன். இருந்தாலும், மதிய உணவுக்கு இட்லியை  ஆர்டர் செய்வது சரியாக இருக்காது. ஒரு சிலர் என் கருத்தை செல்லாக்காசு, அவதூறு என்று சொல்வதற்காக வருத்தப்படுகிறேன். இருந்தாலும், என்  கருத்தில் மாற்றமில்லை,’ என்று கூறியிருக்கிறார். - இதனால், இட்லி போர் நீள்கிறது...

Tags : Italian ,fight ,Englishman ,Boiling South Indian , Ghostly Italian fight on Twitter: Englishman's fuss: Boiling South Indian people
× RELATED ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #TNgovtDismiss_Surappa என்ற ஹேஷ்டேக்!