×

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியகிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாகவும்,  ஆந்திராவின் ராயல சீமா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோரப்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல்,  நீலகிரி, கோயம்பத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும்  புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன்  காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது  முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி  பதிவாகக்கூடும். ் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால்  மீனவர்கள் கடலுக்கள் செல்ல வேண்டாம்.



Tags : New Depression Thundershowers for the next 48 hours
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...