×

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர இணையதளத்தில் விண்ணப்பம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

சென்னை: உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு கலை  அறிவியல் கல்லூரிகளில் 2020-21ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம்  வழியாக இன்று முதல் 20ம் தேதி வரை www.tngasapg.in மற்றும் www.tngasapg.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.  ஒரு  கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய பதிவு கட்டணம் ரூ.2 மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ.58 சேர்த்து ரூ.60 செலுத்தப்பட வேண்டும்.  எஸ்சி/எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு பதிவுக கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.  

மாணவ - மாணவிகள் தங்களின் சான்றிதழ்களை  வருகிற 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை www.tngasapg.in என்ற இணையதளத்தில் உள்ள அட்டவணைப்படி பதிவேற்றலாம். இது தொடர்பான  கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasapg.in மற்றும்  www.tngasapg.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவ - மாணவிகள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28276791 என்ற  எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம். இது தொடர்பாக  care@tngasapg.org மற்றும் tndceoffice@gmail.com என்ற இமெயில் முகவரி மூலமாகவும் மாணவ - மாணவிகள் சந்தேகங்களை கேட்டு  தேவையான வழிகாட்டுதல்களை பெறலாம்.

Tags : KP Anpalagan ,Science Colleges , In government arts and science colleges Join the masters degree Application on the website: Information from Minister KP Anpalagan
× RELATED கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி...