×

கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் சிசிடிவி பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் சிசிடிவி பொருத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரானைட் கொள்ளை தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

2014க்கு பின் பதிவான 70 வழக்குகளில் தொடர்புடைய பலரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கனிமவள கொள்ளைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை பற்றி நவம்பர் 9க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சட்ட விரோதமாக கனிம வளம் திருடு போவதாக டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

கனிமவள கொள்ளையை தடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் அதிகாரிகள் செயல்படுவதில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் கேமராக்கள் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர். கொள்ளையை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 9க்கு ஒத்திவைத்தனர்.

Tags : High Court ,state ,CCTV ,theft , CCTV, High Court
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...