×

தனியார் பள்ளிகளில் 55,000 இலவச சீட் - நிரப்ப ஏற்பாடு

சென்னை: கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 55,000 இடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் இலவச இடங்களை நிரப்புவதற்கான நடைமுறை ஏற்கனவே அறிவித்தபடி நாளை முதல் தொடங்குகிறது. rte.tnschools.gov.in-இல் அக்டோபர் 12 முதல் நவம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் காலி இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Tags : schools , Private school, free seats
× RELATED கர்நாடக அமைச்சர் சர்ச்சை முஸ்லிம்களுக்கு பாஜ சீட் தராது