×

சாலை மேம்பாட்டு பணிக்கு டெண்டர் ரத்து - அதிமுக அரசுக்கு சம்மட்டி அடி

சென்னை: சாலை மேம்பாட்டு பணிக்கு விடப்பட்டுள்ள டெண்டரை ரத்து செய்தது அதிமுக அரசுக்கு சம்மட்டி அடி என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊராட்சி நிதியில் ஊழல் திருவிளையாடல் நடத்தும் எடப்பாடி அரசுக்கு கொடுத்த சம்மட்டி அடி என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஊராட்சி மன்ற அனுமதியின்றி கிராம சாலை மேம்பாட்டு பணிக்கு விடப்பட்ட டெண்டரை ஐகோர்ட் ரத்து செய்தது. சாலை பணிகளுக்கான டெண்டரை ரத்து செய்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கத்துக்கு எதிராக செயல்பட நினைத்த அதிமுக அரசுக்கு தீர்ப்பு சம்மட்டி அடி என்று கூறியுள்ளார்.

Tags : government ,AIADMK , Tender canceled, AIADMK
× RELATED அரசு நிகழ்ச்சியில் பாஜவிடம் அதிமுக...