×

#JusticeForKalaivani சிறுமி கலைவாணியின் படுகொலைக்கு நீதி வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியில் கலைவாணி என்ற நாவிதர் சமுதாயத்தைச் சேர்ந்த13 வயது சிறுமியை  கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கிலிருந்து 19 வயது குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கலைவாணியின் படுகொலைக்கு  நீதி கேட்டு அவரது குடும்பமும், சமுதாயமும் இன்று அறவழிப் போராட்டம் நடத்துகின்றன. அவர்களின் உணர்வை மதித்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags : Ramdas ,murder ,JusticeForKalaivaniSirumi Kalaivani , #JusticeForKalaivani, Girl Art, Assassination
× RELATED தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது: ராமதாஸ் அறிக்கை