×

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றியை யாரும் தடுக்க முடியாது : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பல்லாவரம், : சென்னை பல்லாவரம், ரேடியல் சாலை அருகே ஒரு தனியார் பல்கலை வளாகத்தில் நேற்று மாலை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், பென்ஜமின் ஆகியோர் கலந்து கொண்டு, தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் அங்கீகார சான்றிதழை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் 26 மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பள்ளி திறப்பதை காட்டிலும், மாணவர்களின் உயிர் முக்கியம் என்ற அடிப்படையில் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தாக்கம் குறைந்த பிறகு முதல்வர், மக்கள் நல்வாழ்வு, வருவாய் மற்றும் பள்ளி கல்வி துறை ஆகியவை ஒருங்கிணைந்து, அதற்கான முடிவு எடுக்கப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றியை யாரும் தடுக்க முடியாது. தற்போது முதல்வர் எடப்பாடி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நமக்கு இயற்கை சாதகமாக இருக்கிறது. கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். மொத்தத்தில், இது மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைந்துள்ளது.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.Tags : No one ,Senkottayan ,victory ,AIADMK ,assembly elections , Assembly Election, AIADMK, Victory, Minister Senkottayan, Information
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6...