×

6 மாதமாக ரத்து செய்யப்பட்ட குன்னூர் - ஊட்டி மலை ரயில் : நாளை முதல் மீண்டும் இயக்கம்

ஊட்டி, : நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் சேவை நாளை (10ம் தேதி) முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் பலரும் நீலகிரி மலை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், குன்னூர்-ஊட்டி இடையே கொரோனா வழிமுறைகளை பின்பற்றி ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ஊட்டி- குன்னூர் இடையே நாளை (10ம் தேதி) முதல் ரயில் இயக்கப்படுகிறது. குன்னூர்- ஊட்டி இடையே காலை 7.45, பகல் 12.35, மாலை 4 மணி, ஊட்டி-குன்னூர் இடையே காலை 9.15, பகல் 2 மணி, மாலை 5.30 மணி என தினமும் 6 முறை மலை ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு மலை ரயிலில் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Tags : hill train ,Coonoor-Ooty , Coonoor - Ooty, Hill, Rail
× RELATED நீலகிரி உதகை மலை ரயில் சேவை ஜன. 11 வரை ரத்து!!