×

போதைப்பொருள் கடத்தும் நடிகைகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் : கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தல்!!

தாராபுரம், : போதைப்பொருள் கடத்தும் நடிகைகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு அண்மையில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. தற்போது விவசாய விளை பொருட்கள் அனைத்திற்கும் ஏற்றுமதி அனுமதி வழங்கினால் மட்டுமே விவசாயிகளை பாதுகாக்க முடியும். உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்தால் விளைபொருட்கள் தேக்கமடையும்.

எனவே ஏற்றுமதிக்கான அங்கீகாரத்தை மத்திய அரசு உடனே வழங்கி அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். திரைப்பட நடிகைகள் இப்போது போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தினால் மரண தண்டனை வழங்குவதுபோல் இந்தியாவிலும் மரண தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.



Tags : Drug trafficking actresses ,Nallasamy , Drugs, Death Penalties, s Movement Coordinator, Nallasamy, Insistence
× RELATED கொப்பரை கொள்முதலில் ஊழல் ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு