×

தமிழுக்கான அங்கீகாரத்தை ஒவ்வொரு முறையும் போராடித் தான் பெற வேண்டும் என்ற நிலை இந்தியாவில் நிலவுவது வருந்தத்தக்கது : ராமதாஸ் ட்வீட்!!

சென்னை, : தொல்லியல் படிப்புக்கான தகுதிப் படிப்பு பட்டியலில் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘உத்தரப்பிரதேசத்தில் உள்ள தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்வி நிறுவனத்தில் தொல்லியல் பட்டயப்படிப்பில் சேருவதற்கு தகுதியான படிப்புகளில் தமிழ் செம்மொழியை மத்திய அரசு சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது.  இந்த விஷயத்தில் தவறு திருத்தப்பட்டது தமிழுக்கு கிடைத்த வெற்றி.

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழுக்கான அங்கீகாரத்தை ஒவ்வொரு முறையும் போராடித் தான் பெற வேண்டும் என்ற நிலை இந்தியாவில் நிலவுவது வருந்தத்தக்கது. எந்த ஒரு மொழியின் பெருமையும் யாராலும் மறைக்க முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.


Tags : India ,Tamil , Ramadas, Tweet
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர்களை...