சட்டரீதியான ரகசிய தீர்மானம் காரணமாக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இயலாது : இங்கிலாந்து அரசு

டெல்லி : சட்டரீதியான ரகசிய தீர்மானம் காரணமாக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இயலாது என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது, இதனால் இந்தியாவுக்கு விஜய் மல்லயாவை அழைத்து வரும் மத்திய அரசின் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக இங்கிலாந்து அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவுத்துறை அதிகாரிகள் விஜய்மல்லையாமுறையீடு செய்வதற்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி வருகிறார் என்றும் அவருக்கான கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டதாகவும் , சட்ட பிரச்சனைகள் முடிந்த பின் இங்கிலாந்து அரசுடன் பேச்சு நடத்தி அவரை விரைவில் இந்தியா கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்று திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில்  நீதிபதிகள் யு.யு.லலித், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையாவை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘விஜய் மல்லையா மீது இங்கிலாந்தில் ரகசிய சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும்,  இது நாடு கடத்தல் நடவடிக்கைகளை தாண்டிய தனி நடவடிக்கைகள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது முடியும் வரை அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படமாட்டார் என்றும்  இந்த நடவடிக்கை ரகசியமானது என்பதால் வெளிப்படுத்த முடியாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம்  பேசிய நீதிபதிகள், மல்லையா மீதான அந்த ரகசிய நடவடிக்கைகள் எப்போது முடியும்? அது என்ன மாதிரியான நடவடிக்கைகள்? மல்லையா எப்போது ஆஜராவார்? என்பது குறித்து கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என கூறி, வழக்கு விசாரணையை அடுத்த  நவம்பர் 2-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More