×

உடல்நிலை சரியானதால், தேமுதிக தலைவர் விஜயகாந்த், வீடு திரும்பினார் : தொண்டர்கள் மகிழ்ச்சி!!

சென்னை : உடல்நிலை சரியானதால், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மியாட் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த செப்.22-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருடைய மனைவி பிரேமலதாவும் கொரோனா தொற்று பாதிப்பால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருவருமே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து அக்டோபர் 2-ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்கள். இதனிடையே, அக்டோபர் 6 விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 6ம் தேதி இரவு முதல், இன்று வரை சுமார் 4 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, இன்று விஜயகாந்த் வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பாக தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம் அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றமடைந்ததையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் வீடு திரும்பியதை அடுத்து தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Vijayakand ,Temujin ,home ,Volunteers , Health, Temutika, Leader, Vijayakant, House, Volunteers, Happiness
× RELATED சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க...