×

முழுமையாக நிறைவேறாத கால்வாய் திட்டங்கள் தொடர்மழை பெய்தும் நிரம்பாத கண்மாய்கள்-காரியாபட்டி அருகே விவசாயம் பாதிப்பு

காரியாபட்டி : காரியாபட்டி அருகே உள்ள கண்மாய்களுக்கு பல ஆண்டுகளுக்கு மேலாக நீர்வரத்து இல்லாததால் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பல ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கபட்ட கம்பிக்குடி- நிலையூர் கால்வாய் திட்டம், சென்னம்பட்டி கால்வாய் திட்டம் ஆகியவை முழுமையாக நிறைவேற்றாததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

காரியாபட்டி ஒன்றியம் கம்பிக்குடி, பாப்பனம் ஆகிய கண்மாய்கள் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளன. மழைக்காலங்களில் கம்பிக்குடி பெரிய கண்மாய் நிரம்பிய பின்பு பாப்பனம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். ஆனால், கம்பிக்குடி- நிலையூர் கால்வாய் திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததால் கண்மாய்க்கு தண்ணீர் செல்லாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாய்க்கு தண்ணீர் வராததால் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாப்பனம் கண்மாய்கள் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்து வரத்துக்கால்வாய் மூடப்பட்டுள்ளது. கம்பிக்குடி- நிலையூர் கால்வாய் திட்டத்தின் மூலம் கம்பிக்குடியில் ஏழாயிரம் ஏக்கர், பாப்பனம் இரண்டாயிரம் ஏக்கர் உட்பட என பத்தாயிரம் ஏக்கர் பாசனவசதிக்குரிய விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ``கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தாலும் பாப்பனம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லை.

கண்மாய் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அதிகம் உள்ளது. பல இடங்களில் நாற்று நட்டு விவசாயம் பணிகள் நடந்தாலும் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இல்லாததால் விவசாயம் நடக்காமல் பாப்பனம் வயல்களில் புல்செடிகளாக காட்சி தருகிறது. இதனால் கால்வாய் திட்டங்களை நிறைவேற்றி விவசாயத்தை பாதுகாக்க, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kariyapatti , Kariyapatti: The near Kariyapatti have been flooded for many years
× RELATED குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க...