×

வைரலாக வீடியோ, கடையில் குவியும் கூட்டம் முதியவர் காந்தா பிரசாத் ஹாப்பி

டெல்லி : டெல்லியில் காந்தா பிரசாத் என்பவர் தனது மனைவியுடன் சிறிய உணவகத்தை பாபா தாபா எனும் பெயரில் நடத்தி வருகிறார்.இந்நிலையில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல தொழில்களையும் முடக்கி போட்டுள்ள நிலையில், இவர்களது வாழ்வையும் புரட்டி போட்டது.

வியாபாரத்தை நம்பி வாழ்ந்து வந்த தம்பதியின் உணவகத்திற்கு எவரும் வராததால் 10 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாக காந்தா பிரசாத் கண்ணீர் மல்க பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது.யூடியூபர் ஒருவர்  முதியவர்களின் நிலையை கண்டு தனது யூடியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கங்களில் காந்தா பிரசாத் நிலை குறித்த வீடியோவை வெளியிட்டார்.


alignment=



இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, அவர்களது கடை பெயரான BabaKaDhaba பெரும் அளவில் இந்திய அளவில் ட்ரெண்டாகி தம்பதிகளின் வீடியோ வைரலானது. விடியோவை பார்த்த பலரும் இவருக்கு உதவ முன்வந்தனர்.பட்ட கஷ்டமெல்லம் போதும் என்பன போல் தம்பதிகள் கடைக்கு பலரும் தாமாக சென்று உணவருந்த தொடங்கினர். கூட்டம் அலைமோத மகிழ்ச்சி வெள்ளத்தில் முதியவர்கள் உதவி செய்த அனைவருக்கும் நன்றி  கூறினர்.


alignment=



மேலும் இதனை அறிந்த உணவு டெலிவரி செய்யும் ஜொமேட்டோ நிறுவனம், முதியவர்களை தங்கள் நிறுவனத்தோடு இணைத்துள்ளது. மேலும் விடியோவை வைரலாக்கிய இணையவாசிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

alignment=



தற்போது, பாபா தாபா கடைக்கு உணவு உண்ணவரும் பலரும் சாப்பிட்டு விட்டு செல்பி எடுக்க மறப்பதில்லை.



Tags : Kanda Prasad Happy Elder In Crowd , Queues, Outside,BabaKaDhaba After Couple's Plight Moves Social Media,BabaKaDhaba
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...