கொரோனாவால் வறுமை பழநியில் தவில் கலைஞர் தூக்கிட்டு தற்கொலை

பழநி : கொரோனா கால வறுமையால் பழநியில் தவில் கலைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ராமநாதன் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (64). தவில் கலைஞர். இவருக்கு சத்யபாமா (48) என்ற மனைவி, ராமேஸ்வரி (30), நளாயினி (28), சந்தியா (23) என்ற மகள்கள், கீர்த்திவாசன் (18) என்ற மகனும் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் மாரிமுத்து வீடு கட்ட வங்கி கடன் வாங்கி உள்ளார். கொரோனா காரணமாக நிகழ்ச்சிகள் இல்லாததால், கடனை கட்ட முடியாத சூழல் நிலவி வந்தது. மேலும் வாழ்வாதாரமின்றியும் தவித்து வந்ததாகத் தெரிகிறது.

இதில் மனமுடைந்த மாரிமுத்து நேற்று வீட்டின் அருகே உள்ள தங்கும் விடுதி பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பழநி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாரிமுத்து கடந்த செப். 29ம் தேதி கொரோனா தொற்றில் இருந்து உலகை காப்பாற்ற வலியுறுத்தி தனது உடலில் விளக்குகள் ஏற்றியபடி தவில் வாசித்து நூதன பிரார்த்தனை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>