×

மதனத்தூர் கொள்ளிடம் பாலத்தில் நடைபாதையில் தேங்கி கிடக்கும் மழைநீரால் சேதமாகும் அபாயம்-தண்ணீரை வெளியேற்ற கோரிக்கை

தா.பழூர் : மதனத்தூர் கொள்ளிடம் பாலத்தில் நடைபாதையில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பாலம் சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளது மதனத்தூர் கொள்ளிடக்கரை பாலம். இந்த பாலம் தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்தை இணைக்க கூடிய பிரதான பாலமாக விளங்குகிறது.

இந்த பாலத்தின் வழியாக சென்னையிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சை, திருச்சி செல்லக்கூடிய பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் அதிகப்படியாக பயன்பாட்டில் உள்ளது. தற்போது அவ்வப்பொழுது பெய்து வரும் மழை நீரானது பாலத்தில் தேங்கி பாலத்தின் பலத்தை பலவீனமாக்குகிறது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு பெய்த மழையால் பாலத்தின் இரு புறங்களிலும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் இதுபோல் மழை பெய்யும்போது நடைபாதை பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாசனம் பிடித்துப்போய் உள்ளது.

மேலும் இதற்காக நீர் போக்கிகள் அமைக்கப்பட்டும் மண் மற்றும் குப்பைகளால் அடைக்கப்பட்டு இருப்பதால் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பாலம் ஊறிப்போய் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் பாலத்தில் செல்லும்போது பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு சேதம் ஏற்படுகிறது.

மேலும் தா.பழூர் சுற்றி உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி, பூ, உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய இந்த பாலத்தை பயன்படுத்தி கும்பகோணம் மார்க்கெட் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற விவசாயிகளுக்கும் பெரும் பங்கு வகிக்க கூடிய பாலமாக உள்ளது. ஆகையால் மழைக்காலங்களில் பாலத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி மழைநீர் பாலத்தில் தேங்கா வண்ணம் அடைப்புகளை சரி செய்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Dhaka: Madanathur Kollidam bridge damaged due to rainwater runoff
× RELATED தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று...