×

உறுதியளித்த தேதிக்குள் அதிகாரிகள் அகற்றாததால் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை பொதுமக்களே திரண்டு அகற்றினர்-பெரம்பலூர் அருகே பரபரப்பு

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஓடைப் புறம் போக்கு நிலத்தை, உறுதியளித்த தேதிக்குப் பிறகும் அதிகாரிகள் மீட்டு தராத நிலையில் நூற்றுக் கணக்கான பொதுமக்களே மீட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவில் உள்ளது பெரியவெண்மணி கிராமம்.

இந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுமார் 15ஏக்கர் ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலத்தினை அதே ஊரைச் சேர்ந்த 7பேர் ஆக்கிரமித்து தங்களது வயலுடன் சேர்த்து பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்தகிராமத்து இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் தேவை என்பதால் ஆக்கிர மிக்கப் பட்டுள்ள புறம்போக்கு நில த்தை மீட்டுத் தருமாறு கிராமத்து பொது மக்கள் சார் பில் ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்களிடம் தொடர் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்துள்ளது.

இதனிடையே ஓடைப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள் அதில் பயிரிட்டு சாகுபடி செய்து வருவதால் துறைரீதியான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பெரிய வெண்மணி கிரா மத்து இளைஞர்கள் தமிழக முதல்வர் தனிப்பிரிவு, பெரம்பலூர் கலெக்டர், குன்னம் தாசில்தார், வேப்பூர் வட்டா ர வளர்ச்சிஅலுவலர் ஆகி யோக்கு புகார் மனு அனுப் பி இருந்தனர்.மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்டு 25ம்தேதி குன் னம் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் பயிர்க ளுக்கிடையே நெட்கட்டி வாலிபால் விளையாட்டு என பல்வேறு கட்ட போரா ட்டங்களையும் நடத்தினர்.

இதனையடுத்து வருவாய் த்துறை, வளர்ச்சித் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து கணக்கி ட்டு ஆக்கிரமிப்பாளர்களி டமிருந்து அக்-5ம் தேதி மீட் டுத் தருவதாகக் கூறியதை தொடர்ந்து 6ம்தேதி 2ஜேசி பி எந்திரங்களுடன் பொது மக்கள்தரப்புகாத்திருந்தது.

ஆனால் ஆக்கிரமிப்பாளர் தரப்பில் நீதிமன்ற முறை யீடு செய்திருப்பதை அறி ந்த வருவாய்த்துறை அதி காரிகள் அளித்த வாக்குறு தியை நிறைவேற்றாமல் டிமிக்கிக் கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெரியவெண்மணி கிராம பொதுமக்கள் நேற்று (8ம் தேதி) 100க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு ஓடைப் புறம்போக்கு பகுதிக்குச் சென்று, ஆக்கிரமிப்பாளர்கள் சாகுபடி செய்திருந்த பயிர்களில் தங்களது ஆடு மாடுகளைவிட்டு மேய விட் டதோடு, தடையாக இருந்த புதர்களை, முள்வேலிகளை வெட்டிஅப்புறப்படுத் தினர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. வரு வாய்த்துறை, காவல்துறை துணையின்றி துணிந்து ஈடுபட்டஊர்மக்களின் செய லால் பயிர்கள் சேதமடைந் தன.

இதுகுறித்து வருவாய் த்துறையினரிடம் கேட்ட போது, ஆக்கிரமிப்பாளர்க ளுக்கு நோட்டீஸ் அனுப்பி துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலை யில், பொதுமக்கள் அப்பகு திக்குச் சென்று ஆக்கிரமி ப்பை அகற்றியது தவறு, இ துகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : public ,riot ,Perambalur , Perambalur: Occupied stream side land near Perambalur, as promised.
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...