×

தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்து வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன் : மு.க ஸ்டாலின்

சென்னை : மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பிலான பட்டயப் படிப்பிற்கானத் தகுதியில் தமிழ் மொழி இடம்பெறாமல் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்தை வெளிப்படுத்திய நிலையில், திருத்தப்பட்ட அறிவிக்கையில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளை இணைத்து வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பண்பாட்டு அடித்தளமாக விளங்குபவை மொழிகளே! அவற்றைக் கையாள்வதில் இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பா.ஜ.க கடைபிடிக்கவும் வேண்டாம்; அதை மாநில அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்க்கவும் வேண்டாம் என திமுக தலைவர் முகநூல் பக்கத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.


Tags : MK Stalin , MK Stalin, DMK, Tamil Language,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...