பிறப்பு சம்பவமாக இருக்கலாம் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பாஸ்வான் மறைவிற்கு முதல்வர் இரங்கல்

சென்னை : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பிறப்பு சம்பவமாக இருக்கலாம் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்புடையவர் பாஸ்வான் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர் பாஸ்வான் என்றும், கொள்கை மாறுபாடு கொண்ட மாற்று கட்சியினருடன் அன்பாக பழக கூடிய பண்பாளர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவரை இழந்து வாடும்  அவரது குடுபம்பத்தினருக்கும், அவரது கட்சியை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார் 

Related Stories:

>