×

பொழுதுபோக்கு பூங்காக்காளை திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது : நீச்சல் குளம் செயல்பட தடை

டெல்லி : நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் பொழுது போக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கு பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு அனுமதியில்லை.

பொழுதுபோக்கு பூங்காவில் அதிக அளவு பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்றும் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளங்கள் செயலை பட தடை தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்காக்களில் உள்ள உணவகங்களில் 50% மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு பூங்காவிற்கான டிக்கெட்களை ஆன்லைனனில் விற்க ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் வரும் பார்வையாளர்கள் அனைவரும் தெர்மல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் பூங்காக்களில் கிருமி நாசினி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : amusement park ,Federal Department of Health ,swimming pool , Amusenment park, Central government, Swimming Pools,
× RELATED சில்லி பாயின்ட்…