×

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 11ம் தேதி திருவண்ணாமலையில் கண்டன மாநாடு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: புதிய வேளாண் சட்டங்கள் ஒட்டுமொத்தமாகவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கிவிடக்கூடியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவிப்பின்படி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மாநிலம் முழுவதும் பரவலாக பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மத்திய பாஜ அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வருகிற அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் எனது தலைமையில் கண்டன மாநாடு திருவண்ணாமலையில் நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டை ஒட்டி விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்கிறோம்? என்கிற நூலை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. வெளியிடுகிறார். இந்த மாநாட்டில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், இதர துறைகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

Tags : Protest conference ,announcement ,Thiruvannamalai ,KS Alagiri , Agriculture, Thiruvannamalai, Condemnation Conference, KS Alagiri
× RELATED பாஜ அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து...