×

நெசவு தொழில் நுட்ப கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு

சென்னை:  சென்னை தரமணி நெசவு தொழில் நுட்ப பயிலகம் முதல்வர் அமராவதி வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசின் தொழில் நுட்ப கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை தரமணியில் உள்ள நெசவு தொழில் நுட்பக்கல்லூரியில் 10ம் வகுப்பு தேர்ச்சி  அடைந்தவர்களுக்கான முதலாம் ஆண்டு டிப்ளமோ மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.

முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 15ம் தேதி ஆகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தரமணியில் உள்ள நெசவுத் தொழில் நுட்பப்பயிலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Phase ,Consultation ,College of Weaving Technology , Weaving industry, consultation
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...