நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி?: ரயில்வே வாரியம் தகவல்

சென்னை: நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்ட வருகிறது. இந்நிலையில் மேலும் 7 சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என்று ரயில்வே வாரியம் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எழும்புர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 39 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்கள் இயக்க அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதில் தமிழகத்துக்குள்ளும் 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சந்திரகாச்சி- சென்னை சென்ட்ரல் (ரயில் எண் 22807,22808) வாரம் இருமுறையும், அதைப்போன்று சென்னை சென்ட்ரல்-மதுரை இடையே (ரயில்எண் 20601, 20602) குளிர்சாதன சிறப்பு ரயில்கள் வாரம் இருமுறையும், சென்னை சென்ட்ரல்- டெல்லி நிஜாமுதின் இடையே (ரயில்எண் 12269,12270) குளிர்சாதன ரயில் வாரம் இருமுறையும், பெங்களூர்- சென்னை சென்ட்ரல் சதாப்தி ( இடையே ரயில் எண் 12028, 12029)  செவ்வாய்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். அதைப்போன்று சென்னை சென்ட்ரல்- கோவை சதாப்தி இடையே (ரயில்எண் 12243, 12244) செவ்வாய்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும், சென்னை சென்ட்ரல்- பெங்களூர் இடையே இரட்ைட அடுக்கு சிறப்பு ரயில் (22625, 22626) தினசரி இயக்கப்படும். மேலும் ஹவுரா- யஸ்வந்த்பூர் குளிர்சாதன ரயில் (22863,23864) வாராந்திர சிறப்பு ரயில்களாக இயக்க ரயில்வே வாரியம் மண்டலங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories:

>