×

எழும்பூரில் நீதிபதிகள் தங்கும் விடுதிக்கு டிவி வாங்கியதில் மெகா ஊழல்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: எழும்பூரில் நீதிபதிகள் தங்கும் விடுதிக்கு ெதாலைக்காட்சி பெட்டி வாங்கியதில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. சென்னை மாநகருக்கு அலுவல் காரணமாக வெளியூர்களில் இருந்து வரும் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் தனியார் ஓட்டலில் தான் தங்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எழும்பூரில் நீதிபதிகள் தங்கும் விடுதி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 6.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தங்கு விடுதி கட்டும் பணி கடந்த 2016ல் தொடங்கப்பட்டது. 4 அடுக்குமாடி கொண்ட இந்த தங்கும் விடுதியில் குளிர்சாதன வசதி கொண்ட அறை, உணவருந்தும் அறை, நவீன கழிப்பறை அடங்கிய 23 அறைகள் கொண்ட விடுதி கட்டப்பட்டன. இந்த விடுதி கட்டும் பணி கடந்த 2017ல் முடிவடைந்தது.

இந்த நிலையில் கடந்த 2018ல் ஆகஸ்ட் மாதத்தில் இந்த தங்கும் விடுதியை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார். இந்த விடுதிகளில் தொலைக்காட்சிகள் வைப்பதற்காக 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு அறைகளில் 24 இன்ச் கொண்ட வீதம் 24 தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த 24 இன்ச் கொண்ட தொலைக்காட்சியின் விலை ₹12,999 தான். அதன்படி 24 தொலைக்காட்சிக்கு பெட்டிகளுக்கென 3 லட்சத்து 11 ஆயிரத்து 976 மட்டும் தான் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், 10 லட்சம் முழுவதும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், ₹7 லட்சம் வரை முறைகேடாக கையாடல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.  மேலும், செயற்பொறியாளர் தான் 5 லட்சத்துற்கு மேல் உள்ள வேலையை தர வேண்டும். உதவி பொறியாளர் தரக்கூடாது. ஆனால், இங்கு விதிகளை மீறி 10 லட்சம் வேலையை உதவி பொறியாளர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வேலை தந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : scandal ,judges ,hostel ,Egmore , Chennai, Judges
× RELATED பே-பிஎம் ஊழலில் புதிய தகவல்; 20 புதிய...