×

காவலர்கள் இடமாற்றம்: கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை இடமாற்றம் செய்ததற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ(மதிமுக பொதுச் செயலாளர்): பெரியார் பிறந்த நாளான கடந்த 17ம் தேதி கடலூர் புதுநகர் காவல்நிலைய காவலர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துள்ளனர். பெரியார் சிலையின் கீழ் நின்று புகைப்படமும் எடுத்துள்ளனர். இதை சகித்துக்கொள்ள இயலாத காவல்துறை உயர் அதிகாரிகள், அவர்களை கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்திருக்கிறார்கள். இது கண்டனத்துக்கு உரியது. திருமாவளவன்(விசிக தலைவர்): பெரியார் சிலைக்கும் , அண்ணா சிலைக்கும் காவி உடை அணிவித்தும், காவி சாயத்தை ஊற்றியும் அவமரியாதை செய்பவர்களைக் கைது செய்ய தண்டிக்க முன்வராத தமிழக அரசு, இன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூவரையும் தண்டித்திருப்பது வேதனை அளிக்கிறது.

Tags : Guards ,leaders ,Party , Guards, relocation, condemnation
× RELATED கொரோனா தடுப்பூசி தொடர்பாக அனைத்துக்...